சுவை நிறைந்த பலாப் பழம் பாயாசம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பலாப் பழம் – 20
தேங்காய் பால் – 2 கப்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் – சிறிதளவு
முந்திரி – தேவையான அளவு
கிஸ்மிஸ் – 1 தேக்கரண்டி
நெய் – தேவையான அளவு
செய்முறை
பலாப் பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பலாப்பழத்தை போட்டு வேகவைத்து பின் ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து கொள்ளவும். இப்போது மீண்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததம் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து வைக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி நன்றாக கொதிக்கவிடும். மசித்து வைத்த பலாப்பழ விழுதை சேர்த்து, அதனுடன் ஏலக்காய் தூள் தேங்காய்ப்பால் சேர்த்து காய்ச்சவும். இந்த கலவை ஒரு கொதி வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான தித்திப்பான பலாப் பழம் பாயாசம் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil