பலாப்பழத்தை வைத்து இந்த சுவையான ஸ்வீட் ரெசிபியை குறிஞ்சி.காம் (kurinji.com) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.
மா, பலா, வாழை என முக்கனிகளும் கிடைக்கும் மாதம் என்றால் அது இந்த சித்திரை மாதம்தான். பலாப் பழம் சீசன் தொடங்கிவிட்டது அதனால், பலாப்பழத்தை வைத்து இந்த சுவையான ஸ்வீட் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய டிரை பண்ணுங்கள்.
Advertisment
பலாப்பழத்தை வைத்து இந்த சுவையான ஸ்வீட் ரெசிபியை குறிஞ்சி.காம் (kurinji.com) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.
பலாப்பழம் ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள். ரொம்ப ஈஸியா செய்யலாம்.
பலாப் பழம் சுளைகள் கால் கிலோ எடுத்துக்கொள்ளுங்கள். 1 மூடி தேங்காய் துருவி எடுத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
பலா சுளைகளை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதில், ஒரு கடாயை வையுங்கள். அதில் 1 டீஸ்பூன் அளவு நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் துருவி வைத்துள்ள தேங்காயைப் போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். தேங்காய் வாசனை வருகிற வரைக்கும் வறுக்க வேண்டும். அடுத்து, அரைத்த பலா சுளைகளை சேர்க்க வேண்டும். நன்றாக வதக்குங்கள். கேசரி பதம் வந்ததும், தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து, ஒரு சிட்டிகை தூள் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இனிப்பு சுவையை தூக்கிக் கொடுக்கும்.
சுண்டி வர வரைக்கும் வதக்குங்கள். அல்வா பதம் வந்ததும் இறக்கி வைத்துவிடுங்கள். பலாச் சுளை ஸ்டஃப் தயார். இதை கொழுக்கட்டையில் பூரணமாகவும் வைக்கலாம். 2 நாள் ஆனாலும் கெட்டுப் போகாது.
அடுத்து, மேல் மாவு தயார் செய்ய, ஒரு பவுலில் ஒரு கப் அளவு மைதா மாவு அல்லது கோதுமை மாவு எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் ஸ்பூன் அளவு உப்பு, 1 ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். தேவையான அளவு அளவு தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்தில் கலக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஸ்டவ்வைப் பற்ற வைத்து தீயை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள். ஸ்டவ்வில் ஒரு தோசைக்கல்லை வைத்து, ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை போல சுடுங்கள், வெந்ததும் திருப்பி போடுங்கள். இப்போது ஒரு ஸ்பூனில் பலாச்சுளை ஸ்டஃப் எடுத்து வையுங்கள். தோசையை ஒரு பக்கம் எடுத்து மடித்து மூடி அழுத்துங்கள், நன்றாக ஒட்டிக்கொள்ளும். இது பார்ப்பதற்கு ஒரு பூரணம் கொழுக்கட்டை போலவும், சாப்பிடும்போது போளி போலவும் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்கள். ரொம்ப ஈஸிதான்.