New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/23/MZvUl6IR0bhHELzTp9z5.jpg)
ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடைகளில் 'பாக்' என்று பெயர் கொண்ட இனிப்புகளுக்கு 'ஸ்ரீ' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் குறித்து தற்போது காணலாம்.
ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடைகள், 'பாக்' என்ற சொல் 'பாகிஸ்தான்' நாட்டுப் பெயரை போன்று இருப்பதால், இனிப்புப் பொருட்களின் பெயர்களில் இருந்து 'பாக்' என்ற சொல்லை நீக்க முடிவு செய்துள்ளன. இது ஒரு சுவாரசியமான தேசபக்தியின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. அதன்படி, மைசூர் பாக் இனிப்பு, இனி 'மைசூர் ஸ்ரீ' என்று அழைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
பயங்கரவாத முகாம்கள் மீதான சமீபத்திய ராணுவத் தாக்குதல்களுக்கு ஆதரவாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு வியாபாரிகள், மைசூர் பாக், மோதி பாக், மற்றும் கோண்ட் பாக் போன்ற பாரம்பரிய இனிப்புகளின் பெயர்களை மாற்றத் தொடங்கியுள்ளனர். 'பாக்' என்ற வார்த்தையை 'ஸ்ரீ' என்ற வார்த்தையால் மாற்றியுள்ளனர். இதனால், இனி வாடிக்கையாளர்களுக்கு மைசூர் ஸ்ரீ, மோதி ஸ்ரீ, மற்றும் கோண்ட் ஸ்ரீ போன்ற இனிப்புகள் வழங்கப்படும்.
Who is going to tell them that पाक pāk in Mysore Pak, Moti Pak, Aam Pak etc. is from pāka ಪಾಕ, a Kannada word which means 'sweet condiment' and it shares the same root as Hindi pāg पाग (sugar syrup)? The shared root for both words is Sanskrit पक्व pakvá (cooked, ripe, baked). https://t.co/vqJQnuWXUj
— Abhishek Avtans अभिषेक अवतंस 🌐 (@avtansa) May 22, 2025
இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, கேலியையும், மொழி சார்ந்த விளக்கங்களையும் தூண்டியுள்ளது. மொழியியலாளரும், விரிவுரையாளருமான அபிஷேக் அவ்தான்ஸ் இந்த நிகழ்வின் முரண்பாட்டைக் சுட்டிக்காட்டினார். "மைசூர் பாக், மோதி பாக் போன்றவற்றில் உள்ள 'பாக்' என்பது கன்னடச் சொல்லான 'பாக்கா' என்பதிலிருந்து வந்தது. 'பாக்கா' என்றால் 'இனிப்பு' என்று பொருள்... இரண்டு சொற்களுக்கும் பொதுவான வேர் 'பக்வா' என்ற சமஸ்கிருதச் சொல்" என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 'பாக்' என்று சொல்லாடல் தொடர்பான மாற்றம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளப்பாட்டாலும் ஒரு விவாதமாகவும் மாறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.