scorecardresearch

ரத்த சர்க்கரை அளவு அதிகமாவே இருக்கா? வாரத்திற்கு 3 முறை இந்த ஜூஸ் குடிங்க

சர்க்கரை அளவை குறைக்க இரண்டு முக்கியமான உணவு பொருள் உள்ளது. ஒன்று பாகற்காய், இனியொன்று நாவல் பழங்கள். இது இன்சுலின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

நாவல் பழம்

சர்க்கரை நோய் ஏற்பட்டவுடன், நாம் முதலில் செய்ய வேண்டியது நாம் வாழும் முறையை மாற்றிக்கொள்வதுதான். ஆரோக்கியமான மாற்றங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.  இந்நிலையில் இயற்கையாக செய்யக்கூடிய பழச்சாறில், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நமது இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

சர்க்கரை அளவை குறைக்க இரண்டு முக்கியமான உணவு பொருள் உள்ளது. ஒன்று பாகற்காய், இனியொன்று நாவல் பழங்கள். இது இன்சுலின் அளவை சீராக வைக்க உதவுகிறது. இந்நிலையில் சீரணம் தொடர்பான சிக்கல், சருமம் தொடர்பான சிக்கல், நச்சுத்தன்மையை நீக்குவது, நமது உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.

பாகற்காய், நாவல் பழத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்கும் தன்மை உள்ளது. பாகற்காயில், பாலிபெப்டைட் பி உள்ளது. இது இன்சுலின் அளவில் ஏற்றத்தாழ்வு இருந்தால், அதை சரியாக்கி, ரத்த சர்க்கரையை அதிகரிக்காது. இது வீக்கத்தை குணப்படுத்தும், சருமப் பிரச்சனைகளை கூட குணமாக்கலாம்.

நாவல் பழத்தில் வட்டமின் ஏ, வைட்டமின் சி, பையோட்டின், சிங் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால், சர்க்கரை அளவு அதிகரிக்காது.

இத இரண்டையும் வைத்து ஜூஸ் எப்படி செய்வது

பாகற்காயில் பாதியை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் 7 நாவல் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்றாக அரைத்து கிடைக்கும் சாறை வடிகட்டவும். தொடர்ந்து அந்த சாறில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்க்கவும். மேலும் உப்பை சேர்க்கவும். இதுபோல இதில் பொதினா இலைகள், ½ டேபிள் ஸ்பூன்  இஞ்சி ஆகியவற்றை சேர்க்கலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Jamun fruit and bitter gourd for high sugar patients