ஜப்பான் நாட்டு ரெசிபி... குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க; ஒருமுறை இப்படி செய்து குடுங்க!

இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு வித்தியாசமாக, விதவிதமான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்காக ஒரு சிம்பிளான ஜப்பான் நாட்டு ரெசிபி, இதை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுரை இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள்.

author-image
WebDesk
New Update
japan recipe

குழந்தைகளுக்கு வித்தியாசமாக, விதவிதமான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்காக ஒரு சிம்பிளான ஜப்பான் நாட்டு ரெசிபி (Image Source: Instagram/ sowbisamayal)

இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு வித்தியாசமாக, விதவிதமான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்காக ஒரு சிம்பிளான ஜப்பான் நாட்டு ரெசிபி, இதை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுரை இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள்.

Advertisment

முட்டையை வைத்து ஜப்பான் நாட்டு ஸ்டைலில் ஒரு ஃபிளஃபியான ஆம்லெட் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள், விரும்பி சாப்பிடுவார்கள்.

ஜப்பான் ஃபிளஃபி ஆம்லெட் செய்வது எப்படி என்று சவுபி சமையல் (sowbisamayal) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து காட்டியுள்ளனர். இந்த ஜப்பான் ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

ஜப்பான் ஃபிளஃபி ஆம்லெட் செய்முறை:

Advertisment
Advertisements

முதலில் 4 முட்டைகள் எடுத்துக்கொள்ளுங்கள், முட்டைகளை உடைத்து வெள்ளைக்கரு தனியாகவும் மஞ்சள்கரு தனியாகவும் பிரித்து தனித்தனி பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது வெள்ளைக்கருவில் சிறிது அளவு உப்பு போட்டு நன்றாகக் கலக்குங்கள், கிரீம் போல வரும் வரைக்கும் கலக்கிக்கொண்டே இருங்கள். அதே போல, மஞ்சள்கருவில் சிறிது அளவு உப்பு போட்டு நன்றாகக் கலக்குங்கள்.

பிறகு, ஸ்டவ்வைப் பற்ற வைத்து சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வானலியை எடுத்து வைத்து, அதில் சிறிது அளவு வெண்ணெய் தடவுங்கள், இப்போது கலக்கி வைத்துள்ள மஞ்சள் கருவை எடுத்து ஊற்றுங்கள். வெந்த பிறகு திருப்பி போடுங்கள். இதையடுத்து, கலக்கி வைத்துள்ள வெள்ளைக்கருவை ஊற்றுங்கள். அதன் மீது உங்களுக்கு விருப்பமான மசாலா பொடியை லேசாகத் தூவிக் கொள்ளலாம், அப்படியே 3-4  நிமிடங்கள் மூடி வைத்து திறந்து பார்த்தால் ஜப்பான் ஃபிளஃபி ஆம்லெட் தயார். பார்க்க கேக் மாதிரி ஃபிளஃபியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.  

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: