சீரகம் நாம் எப்போதும் சமைக்கும் உணவுக்கு பயன்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. குமினம் சைமினியம் என்ற தாரவக் குடும்பத்தை சேர்ந்தது. வயிற்றுக் கோளாறு சரி செய்ய உதவும். ஜீரண வழித் தடத்தை அது இலகுவாக்கும்.
குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு தீர்வாக இருக்கிறது. டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, துணை சிகிச்சை முறையில் அவர்களுக்கு சீரகம் அளிக்கப்பட்டது. சாப்பிடுவதற்கு முன்பாக இருக்கும் சர்க்கரை அளவை, சீரகம் சீராக்குவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
சீரகத்தில் தைமோக்யூனியன் (thymoquinone) என்ற வேதியல் பொருள், ரத்த குளுக்கோஸை குறைக்க உதவுகிறது. மேலும் இது பி- செல்களை பாதிப்பிலிருந்து தடுக்கிறது.
நாம் சீரகத்தை முழுவதுமாக அல்லது பொடியாக அரைத்து சாப்பிட்டு வந்தால், ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதோடு, சரியான உடல் எடையை பின்தொடர முடியும். இது எல்.டி.எல் என்ற கெட்ட கொல்ஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
சீரகத்தில் வீக்கத்திற்கு எதிரான, தன்மை இருப்பதால், சர்க்கரை நோயால் ஏற்படும் கூடுதல் பாதிப்புகளான, இதய நோய்யை தடுக்க உதவும்.
இந்நிலையில் நாம் சீரகத்தை எப்படி சேர்த்து சாப்பிடுவது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
வறுத்த சீரகத்தை, காய்கறி சாலட் அல்லது நாம் சமைக்கும் மாமிசத்தில் மேலே தூவி சாப்பிடலாம். சூப், ஸ்டூ மற்றும் மற்ற உணவு வகைகளில் சீரகத்தை சேர்த்து சாப்பிடலாம். இது போல கீரை அல்லது பீன்ஸ் பொரியல் செய்யும்போது சீரகத்தை சேர்த்து கொள்ளலாம்.
இந்நிலையில் ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, சுமார் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து குடிக்கலாம். அல்லது உணவு சாப்பிட்ட பிறகு ஒரு டீஸ் பூன் வறுத்த சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“