உடல் எடையை குறைக்க நாம் பல வழிகள் மேற்கொள்வோம். அதில் முக்கியமானது நாம் எத்தனை கலோரிகளை எடுத்துக்கொள்வதில் கவனம் வேண்டும். இந்நிலையில் இனிப்பு சேர்க்காமல் சில பழ சாறு மற்று காய்கறி ஜூசை குடிப்பது நல்லது.
ஆரஞ்சு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. இதில் நார்சத்து மற்றும் பொட்டாஷியம் இருக்கிறது. இதனல் உடல் எடை குறைப்பவர்கள் இதை தேர்வு செய்யலாம். மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளாவோநாய்ட்ஸ் இருக்கிறது.
கேரட்
இதில் வைட்டமின் ஏ, கே, சி , நார்சத்தும் பொட்டாஷியம், போலேட், மினரல்ஸ் இருக்கிறது. இது உடல் எடை குறைக்கமட்டுமல்ல, கண் பார்வை, ஜீரணம்,சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

சுரக்காய் ஜூஸ்
இந்த காய்கறி ஜூஸ் இதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் உதவுகிறது. இது உடல் எடை குறைக்க உதவுகிறது. உங்களால் இதன் சாறை குடிக்க முடியவில்லை என்றால், இத்துடன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சையை சேர்த்து குடிக்கலாம்.