வீடே மணக்கும் கடலை குருமா: இப்படி செய்து பாருங்க: மாதம்பட்டி ரங்கராஜ் சுப்பர் ரெசிபி

மாதம்பட்டி ரங்கராஜ் செய்தமாதிரி, கடலை குருமா நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.

மாதம்பட்டி ரங்கராஜ் செய்தமாதிரி, கடலை குருமா நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa

தேவையானப் பொருட்கள்

Advertisment

தக்காளி - 1

 

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

Advertisment
Advertisements

 

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

 

மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி

 

சன்னா மசாலா தூள் - 1 தேக்கரண்டி

 

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

 

கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி

 

வெந்தய இலை - சிறிது

 

கொத்தமல்லித்தழை - சிறிது

 

உப்பு - தேவையான அளவு

 

தேங்காய் துருவல் - 100 கிராம்

 

முந்திரிப்பருப்பு - 5

 

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

 

பட்டை - 1

 

கிராம்பு - 2

 

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

 

பெரிய வெங்காயம் - 1

 

பச்சை மிளகாய் – 2

செய்முறை

வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் கொண்டைக்கடலை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சன்னா மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதோடு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதற்கு  கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீரை கூட உபயோகப்படுத்தலாம். கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.குருமா கெட்டியானதும் கொத்தமல்லித்தழை, வெந்தய இலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.சுவையான கொண்டைக்கடலை குருமா ரெடி. இது பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: