வழக்கமான இட்லி போல் அல்லாமல் இந்த கடலை பருப்பு இட்லி செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு-2கப்
பச்சரிசி- 2கப்
தேங்காய் துருவல்- 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 8
உப்பு
பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
புளிச்சாறு- தேவையான அளவு
செய்முறை :
கடலை பருப்பு, அரிசியை ஒன்றாக ஊறவைத்து, ஒரு மணி நேரம் கழித்து, கழுவிக்கொள்ளுங்கள். கிரைண்டரில் மிளகாயை முதலி சேர்த்து, புளி தண்ணீர் சேர்த்து, அரைக்க வேண்டும். மிளாகாய் அரைத்ததும். தேங்காய், கடலை பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை சேர்த்து அரையுங்கள். தொடர்ந்து மீண்டும் புளி சாறு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் இந்த மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்நிலையில் இந்த மாவை ஊறவைக்க வேண்டிய தேவையில்லை. வேண்டும் என்றால் 3 மணி நேரம் ஊறவைத்து இட்லி சுடலாம்.