Advertisment

பால் புடிக்கலையா… இந்தக் கீரை ஒரு கப் போதும்!

சிலருக்கு பால் புடிக்காது, அவர்களுக்கு எல்லாம் பாலில் உள்ள பலன்களை அளிக்க ஒரு உணவு இருக்கிறது. அதுதான் கேல் கீரை என்கிற பரட்டைக் கீரை. ஒரு கப் கேல் கீரை சாப்பிட்டால் போதும், தேவையான ஆரோக்கிய உட்டச்சத்து எல்லாமே கிடைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kale leaf in english, kale leaf benefits, kale leaves benefits, kale leaf benefits for lactose intolerant, பால் புடிக்கலையா... இந்தக் கீரை ஒரு கப் போதும், கேல் கீரை, பரட்டை கீரை, கேல் கீரை பலன்கள், kale vegetable, kale leaf gw2, kale leaf images, kale leaf recipe, kale leaf, kale leaves source of nutrients

பலரும் கேள்விப்படாத இந்த கேல் கீரை சாப்பிடுவதால் நல நன்மைகள் கிடைக்கிறது. இந்த கேல் கீரையை சிலர் பரட்டைக் கீரை என்றும் கூறுகின்றனர். தினமும் ஒரு கப் கேல் கிரை சாப்பிட்டால், 100 சதவீதம் வைட்டமின் கே கிடைக்கும். இந்த கேல் கீரையை சமைப்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்கும். இந்த கேல் கீரையின் சுவை கொஞ்சம் கசப்பாக இருக்கும் என்பதால் இது பலருக்கு விருப்பமாக இருக்காது. இருப்பினும், கேல் கீரையில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு, நிச்சயமாக நீங்கள் கேல் கீரையை முயற்சி செய்யலாம். ஏனென்றால், பால் புடிக்காதவர்கள், ஒரு கப் கேல் கீரை சாப்பிட்டால் போதும், நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து கிடைக்கும்.

Advertisment

ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், எலும்புகள் வலுவாக இருக்க கேல் கீரை சிறந்தது என்கிறார்கள். அதற்கு, காரணம், கேல் கீரையில் அடங்கியுள்ள ஏராளமான ஊட்டச்சத்துதான் காரணம்.

ஒரு கப் கேல் கீரையில் ஒரு கோப்பையில் 100 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்பு பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவு என்று ஊட்ச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடும் சைவ உணவு உண்பவர்கள் அல்லது பால் புடிக்காதவர்களுக்கு இந்த கேல் கீரை சிறந்த ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக இருக்கும்.

எலும்பு பிரச்னை உள்ளவர்கள், எலும்பு பலவீனமாக உள்ளவர்கள் உணவில் கால்சியம் எடுத்துக்கொள்வதற்கு பாலை நம்பி உள்ளனர். ஆனால், சிலருக்கும் பால் புடிக்காது. ஆனால், அவர்களுக்கு தேவையான கால்சியத்தை எடுத்துக்கொள்ள, எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஒரு கீரை உள்ளது என்று சொன்னால் அது கேல் கீரைதான். ஒரு கப் கேல் கீரை சாப்பிட்டால், பல நன்மைகள் இருக்கிறது.

கேல் கீரை கால்சியச் சத்து ஆதாரமாக இருக்கிறது. அதோடு, கேல் கீரையில் வைட்டமின் கே 1 உள்ளது. இது சிறு நீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் உடலில் உள்ள கால்சியம் அளவை உறிஞ்சி கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் கே குறைபாடு உள்ளவர்களுக்கு எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
ஒரு கப் கேல் கீரை தினசரி சாப்பிட்டால், அதில் வைட்டமின் கே 100 சதவீதம் உள்ளது. கேல் கீரையை சமைப்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்து கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்கும். வைட்டமின் கே பற்றாக்குறையை இந்த கேல் கீரை ஈடு செய்கிறது.

கேல் கீரையில் சுவையை அதிகரிக்க, இதில் சூப்கள், முட்டை மற்றும் சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். அல்லது சிலவற்றை ஆலிவ் எண்ணெயில் சமைத்து, உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம். அதே நேரத்தில், உணவுமுறையில் மாற்றம் செய்யும்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Food Recipes Food Tips Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment