சுவையான கல்யாண வீட்டு சுவையைல் வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை மற்றும் இட்லி போன்ற பல்வேறு உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். திருமண விருந்துகளில் பரிமாறப்படும் இந்த சுவையான பொரியல்களை டெரஸ் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3 உருளைக்கிழங்கு - ½ கிலோ சிறிய வெங்காயம் - தேவையான அளவு இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - சில பற்கள் வேர்க்கடலை - சிறிதளவு எள் - சிறிதளவு பச்சை மிளகாய் - தேவையான அளவு கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு பெருங்காயத்தூள் - சிறிதளவு துருவிய தேங்காய் - ½ கப் கறிவேப்பிலை - சிறிதளவு எலுமிச்சை - 1 பட்டை - சிறிய துண்டு கிராம்பு - 2-3 கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - தேவையான அளவு காஷ்மீரி மிளகாய் தூள் - நிறத்திற்காக கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - ½ தேக்கரண்டி வெந்தயம் - ¼ தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உப்பு எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
வாழைக்காயின் தோலை நீக்கி, வட்ட வடிவ அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக்கவும். பின்னர், இந்த துண்டுகளை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் ஊற வைக்கவும். இதனால் வாழைக்காய் கருத்துப் போகாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, பெரிய துண்டுகளாக வெட்டி, பாதி வேகும் வரை கொதிக்க வைக்கவும். பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு, சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வேர்க்கடலை, எள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். பின்னர், துருவிய தேங்காயையும் சேர்த்து மேலும் அரைத்துக்கொள்ளவும்.
ஊறவைத்த வாழைக்காய் துண்டுகளை எடுத்து, பொன்னிறமாக மாறும் வரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.பாதி வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து, அதே எண்ணெயில் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். கொத்தமல்லி இலைகள், பெருங்காயத்தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
இறுதியாக, பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் துண்டுகளை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து, அரைத்த மசாலாவை அவற்றின் மீது ஊற்றி நன்றாகக் கலக்கவும். சுவையான திருமண பாணி வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் தயார்.