செஃப் பட் சொன்ன மாதிரி கல்யாண வீட்டு ரசம் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
புளி கரைசல் – 2 மேசைக் கரண்டி
தக்காளி- 3
கறிவேப்பிலை – சிறிதளவு
கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் – அரை தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை:
சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.ஓர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு தக்காளி குழைய வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும். புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வளவுதான் சூடான மிளகு ரசம் ரெடி! இறக்கியதும் அதன்மேல் கொத்தமல்லித் தழைகளைத் தூவி விடலாம். தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதிக நேரம் கொதிக்க வைக்கக்கூடாது.