சேமியா ஐஸு, ஜவ்வுமிட்டாய், கமர்கட்டு, குருவி ரொட்டி .. இது எல்லாம் வெறும் உணவுகள் மட்டும் அல்ல. 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு அது ஒரு எமோஷன்.
Advertisment
உங்களுக்கு கமர்கட்டு பிடிக்குமா? ஈஸியா வீட்டுலேயே செய்யலாம். இந்த வீடியோ பாருங்க
முதலில், அடிகனமான கடாயில் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
Advertisment
Advertisements
தேங்காயின் பழுப்பு நிறப் பகுதியைத் தவிர்ப்பது முக்கியம். தேங்காயை மிதமான தீயில் வறுக்கவும், அதில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி உதிரியாகும் வரை வறுக்கவும். அது பழுப்பு நிறமாக மாறக்கூடாது.
தேங்காய் தயாரானதும், அதை கடாயில் இருந்து எடுக்கவும்.
அடுத்து, ஒரு தனி பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அளவை மாற்றிக்கொள்ளலாம்) மற்றும் அரை கப்-க்கு கொஞ்சம் குறைவாக தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை சூடாக்கவும். பாகுவிற்கு குறிப்பிட்ட பாகுத்தன்மை தேவையில்லை.
வெல்லப்பாகை தேங்காய் வறுத்த அதே கடாயில் வடிகட்டவும்.
பாகை அதிக தீயில் கொதிக்க வைத்து "உருண்டை பதம்" வரும் வரை சமைக்கவும்.
இந்த பதத்தை சரிபார்க்க, சிறிதளவு பாகை எடுத்து ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் விடவும். அது மென்மையான, கரையாத பந்து போல் உருவானால், அது தயாராகிவிட்டது.
பாகில் பொடித்த ஏலக்காய் (அல்லது சுக்கு பொடி) சேர்க்கவும். தொடர்ந்து வறுத்த தேங்காயை சேர்க்கவும்.
தேங்காய் நன்கு கலந்து, கலவை ஒன்றாக திரண்டு வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
இதை நெய் தடவிய தட்டிற்கு மாற்றவும்.
லேசாக ஆறியதும், நெய் தடவிய கைகளால் சிறிய பந்துகளாக உருட்டி, கமர்கட்டை முழுமையாக ஆறவிடவும்.
சுவையான, பாரம்பரிய கமர்கட் ரெடி.