உடலை குளிர்விக்கும் கம்பு கூழ்... ரோட்டுகடை ஸ்டைலில் உங்க வீட்டுல இப்படி செஞ்சு அசத்துங்க!

கூழ் உடலுக்கு ஆரோக்கியமானது அதே சமயம், குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த கம்பங்கூழ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கூழ் உடலுக்கு ஆரோக்கியமானது அதே சமயம், குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த கம்பங்கூழ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
கம்பங்கூழ்

கோடை காலம் வந்துவிட்டால் பலரும் குளிர்ச்சியான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக இன்றைய கால இளைஞர்கள் அதிகம் நாடி செல்வது கூல்டிரிங்ஸ் தான். ஆனால் இதில் இருக்கும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதே சமயம் வெயில் காலங்களில், கூல்டிரிங்ஸ் அதிகரித்து வருவது தடுக்க முடியாத ஒரு மாற்றம் தான்.

Advertisment

அதே சமயம் நமது முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் குளிர்ச்சியான பொருட்களை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த வகையிலான ஒரு உணவு தான் கம்பங்கூழ். கம்பு வைத்து செய்யப்படும் இந்த கூழ் உடலுக்கு ஆரோக்கியமானது அதே சமயம், குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த கம்பங்கூழ் எப்படி செய்வது என்று பார்ப்போமா? அதுவும் ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி செய்வது என்று யம்மி டேஸ் வித் கவிதா யூடியூப் பக்கத்தில்  கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கம்பு  
வெங்காயம்  
மோர் 
தண்ணீர் 
உப்பு

Advertisment
Advertisements

செய்முறை

முதலில் கம்பை ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு குரகுரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பானை வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பானையில் தண்ணீர் கொதித்தவுடன், அதில் அரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து வேக வைக்கவும். கம்பு நன்றாக வெந்தவுடன், ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் எடுத்த வேக வைத்த கம்புடன், நறுக்கிய வெங்காயம், மோர் சேர்த்து கலக்கினால் சுவையான கம்பங்கூழ் ரெடி. இதை மிளகாயுடன் சேர்த்த மாங்காய், வறுத்த வத்தல் மற்றும் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். 

கம்பை முன்னாடி நாள் சாதம் செய்து அடுத்த நாள் கூழ் கரைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். கம்புக்கு நம் உடலை குளிர்ச்சியாக்கும் ஆற்றலும் இருக்கிறது. கம்பு மாவை கூழாக்கி சாப்பிடும் போது நம் குடல் தூய்மையாகும்.  

Summer beverages that can dehydrate your body Refreshing summer drinks to beat the heat

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: