ஒரு முறை இப்படி கம்பு தோசை செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 2 கப்
அரிசி மாவு – கால் கப்
உப்பு – தேவையான அளவு
முருங்கைக்கீரை இலை – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் பாத்திரம் எடுத்து அதில் அரிசி மாவு, கம்பு மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலக்கவும், தோசை மாவு பதம் இருந்தால் போதும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும். அடுத்து முருங்கைக் கீரை இலைகளை சிறிதாக நறுக்கி சேர்க்கவும். இதனை நன்கு கலந்துவிட்டு எப்போதும் போல் தோசை ஊற்றவும். சுவையான சத்தான, தோசை ரெடி.