பிரபல சித்த மருத்துவர் சிவராமன் கம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறியுள்ளார். குறிப்பாக பெண்களுக்கு நல்லது என்றும் கம்பு சாப்பிடுவதால் அதிக உடல் ஆரோக்கியம், இரும்புச் சத்து கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக ரத்தப் போக்கு இருக்கும், இரும்பு சத்தும் குறையும். அந்த நேரங்களில் கம்வு சாப்பிட்டால் இரும்பு சத்தை பெறலாம்.
நெய் அரிசியை விட கம்பு சோற்றில் இரும்புச் சத்து அதிகம். நெய் அரிசியை விட 8 மடங்கு இரும்புச் சத்து கம்பில் உள்ளது.
வாரத்திற்கு 2 முறை கம்பு சோறு, மோர் சோறு அல்லது கம்பு கூழ் செய்து சாப்பிடலாம். மோர் வெங்காயத்துடன் கம்பு கூழ் சாப்பிடுவது சிறப்பு. ஒவ்வொரு வீட்டில் வாரத்தில் 2 முறை மோர் வெங்காயத்துடன் கம்பு கூழ் சாப்பிட வேண்டும். வேறு எந்த உணவிலும் கிடைக்காத சத்து உள்ளது.
மோர் சேர்த்து கம்பு கூழ் செய்யும் போது உடலுக்கு தேவையான பல நுண்ணுயிரிகள் கிடைக்கும். லேக்டோ பேஸிலஸ் நுண்ணுயிரி கிடைக்கும். உடலுக்கு நல்லது செய்யக் கூடிய ப்ரோ-பையடிக் மோரில் உள்ளது. ஆகவே மோருடன் கம்பு கூழ் சாப்பிடுவது சிறப்பானதாக அமைகிறது என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“