/indian-express-tamil/media/media_files/2025/05/08/rb6lNpkngIw3GUtUcFbM.jpg)
Kambu koozh
கம்பு இயற்கையாகவே நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பல்வேறு வைட்டமின்களை உள்ளடக்கியது. கூழாக உட்கொள்ளும்போது இந்த சத்துக்கள் எளிதில் உடலுக்கு கிடைக்கின்றன. கம்மங்கூழ் இயற்கையாகவே குளிர்ச்சித்தன்மை கொண்டது. கோடை காலங்களில் இதை குடிப்பதால் உடல் வெப்பம் தணிக்கப்பட்டு, புத்துணர்ச்சி கிடைக்கிறது.
கம்மங்கூழை அப்படியே பானமாக குடிக்கலாம். மேலும், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து சுவையூட்டலாம். சில பகுதிகளில் கம்மங்கூழில் ஊறுகாய் அல்லது வற்றல் குழம்பை தொட்டுக்கொண்டும் சாப்பிடுவது வழக்கம்.
கம்மங்கூழ் வெறும் உணவு மட்டுமல்ல, அது நமது பாரம்பரியத்தின் ஒரு அடையாளம். உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இந்த எளிய உணவின் பயன்கள் குறித்து இந்த வீடியோவில் கூறுகிறார் டாக்டர் சிவராமன்
கம்மங்கூழ் தயாரிக்கும் முறை
முதல் நாள் இரவே கம்பு மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, ஒரு மண் பானையிலோ அல்லது பாத்திரத்திலோ ஊற்றி வைக்கவும்.
அதை மூடி, இரவு முழுவதும் நொதிக்க விடவும்.
மறுநாள் காலையில், இந்த நொதித்த கரைசலை கொதிக்க வைத்து கூழ் பதத்திற்கு கிளறவும்.
ஆறியதும் உப்பு மற்றும் மோர் சேர்த்து பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.