கமுதி கார சேவு... தரமான ஈவினிங் ஸ்நாக்ஸ்; இப்படி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
சேவு பிரியர்களுக்கு கமுதி கார சேவு ஒரு தரமான ஈவினிங் ஸ்நாக்ஸ், இந்த கமுதி கார சேவு இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கமுதி கார சேவு எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.
சேவு பிரியர்களுக்கு கமுதி கார சேவு ஒரு தரமான ஈவினிங் ஸ்நாக்ஸ், இந்த கமுதி கார சேவு இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கமுதி கார சேவு எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.
கமுதி கார சேவு டீ கடை கிச்சன் (Tea Kadai Kitchen) யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளார்கள். இதில் சுவைக்கு மாவு எப்படி தயார் செய்வது என்பது முக்கியம்.
சேவு பிரியர்களுக்கு கமுதி கார சேவு ஒரு தரமான ஈவினிங் ஸ்நாக்ஸ், இந்த கமுதி கார சேவு இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கமுதி கார சேவு எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.
Advertisment
கமுதி கார சேவு டீ கடை கிச்சன் (Tea Kadai Kitchen) யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளார்கள். இதில் சுவைக்கு மாவு எப்படி தயார் செய்வது என்பது முக்கியம்.
கமுதி கார சேவு செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் தூள் உப்பு எடுத்துக்கொள்ளுங்கள். காரத்துக்கு 1 டீஸ்பூன் தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், எள் ஒரு அரை டீஸ்பூ, சீரகம் அரை டீஸ்பூன், பெரிய பூண்டு 5 பல்லு எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வடிகட்டி பூண்டு சாறு எடுத்து சேர்க்க வேண்டும். இதனுடன் 50 மி.லி தண்ணீர் சேர்க்க வேண்டும். நன்றாகக் கலக்கி விடுங்கள். இதனுடன் வெதுவெதுப்பான சூட்டில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் சேர்க்க வேண்டும். நன்றாகக் கலந்துவிடுங்கள். பட்டாணி பருப்பு மாவு 75 கிராம் அளவு போடுங்கள். அதே அளவு கடலை மாவு அரை கப் போடுங்கள். அதே அளவு அரிசி மாவு போடுங்கள். அதே அளவு கிழங்கு மாவு போடுங்கள். நன்றாக பிசையுங்கள், தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையுங்கள். மாவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளுங்கள். கமுதி கார சேவுக்கு மாவு ரெடி.
இப்போது வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு பண்ணுங்கள். இப்போது ஒரு ஜல்லிக் கரண்டி எடுத்து அதில்தான் மாவை அழுத்தி தேய்த்து கார சேவு போட வேண்டும். நன்றாகப் பொரிந்து வெந்தவுடன் எடுத்தால் கமுதி கார சேவு தயார். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.