கண்டந்திப்பிலி ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
புளி – கொட்டைப்பாக்கு அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு, – சீரகம், துவரம்பருப்பு, தனியா – தலா 1 ஸ்பூன்
மிளகாய் – 2
கண்டத்திப்பிலி – 4 குச்சி
அரிசி திப்பிலி – 2
தாளிக்க
நெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பச்சைவாசனை போனதும் வறுத்து அரைத்த பொடியைப் போட்டு மேலும் நீர் சேர்த்து 1 கொதிவிட்டு நுரைத்து வந்த உடன் இறக்கி விடவும். அதிகம் கொதித்தால் கசக்கும், அடுத்து நெய்யில் தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும். இப்போது ஆரோக்கியமான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“