நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு உணவு தோசை, இட்லியாகத் தான் இருக்கும். பள்ளி, அலுவலகம் செல்ல ஏதுவாக காலை டிபன் செய்து சாப்பிட்டு கிளம்பி செல்வோம். சீக்கிரம் வேலை முடித்து கிளம்ப வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் எப்போது ஒரே மாதிரி சாப்பிடுவதும் போர் அடிக்கும். புதிதாக மதுரை ஸ்பெஷல் கார தோசை செய்து சாப்பிடுங்கள். ஈஸி ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - தேவையான அளவு
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 5
வர மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டு, வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவு ஊற்றவும் சுற்றி எண்ணெய் ஊற்றிவும் இப்போது அதன் மீது அரைத்த கார சட்னியை தடவி, இரண்டாக மடித்து திருப்பி போடவும். இருபுறமும் மொறுமொறுவென்று வந்ததும் தோசை கல்லில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும். அவ்வளவு தான் ஸ்பெஷல் கார தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“