காய்கறி இல்லாத நேரத்துல காரைக்கால் கட்டுசோறு சுவையாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம். இதை சிம்பில் சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பது பற்றி பார்ப்போம். சில நேரங்களில் மதிய உணவு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போதே இந்த உணவை நீங்கள் ட்ரை செய்து பாருங்கள்.
Advertisment
தேவையான பொருட்கள்:
அரிசி தேங்காய் பால் 1 கப் வெங்காயம் சின்ன வெங்காயம் காய்ந்த சிவப்பு மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகப் பொடி மிளகு தூள் புளி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை கொத்தமல்லி தழை கடலை எண்ணெய் உப்பு
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு குக்கரில் எண்ணெய் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொறிய விட்டு அதில் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு சேர்த்து வதக்கி விடவும்.
அடுத்ததாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்ததாக இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பின்னர் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி விடவும்.
அடிப்பிடிக்க விடாமல் வதக்க வேண்டும். புளி தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் நீங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு தேவையான அளவு உப்பு காரம் இருக்கிறதா என்று பார்த்து மூடிவிட்டு விசில் வரும் வேகவிட்டு எடுக்கவும்.