காரைக்குடி சமையல் சாப்பாடு என்றாலே தனி சுவை உள்ளது. அதிலும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சாப்பாடு என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட கல்யாண வீடுகளில் விருந்தாக்கப்படும் தாளிச்ச இடியாப்பம் செட்டிநாடு ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி - 700 கிராம்
இட்லி அரிசி - 300 கிராம்
கடுகு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன்
வெங்காயம் (பெரிய அளவு) - 4
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை
தயிர் - 1 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை
எப்போதும் போல இடியாப்பம் சுட்டு உதிரியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி விடவும். அடுப்பை அணைத்துவிட்டு அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து இறக்கவும்.
காரைக்குடி தாளிச்ச இடியப்பம் செய்வது எப்படி | Karaikudi Annalakshmi | CDK 1106 |Chef Deena's Kitchen
பின்னர் ஒரு தட்டில் இடியாப்பத்தை சேர்த்து அதில் தாளிப்பை கொட்டி கலந்துவிட்டு மேலே சில மல்லி தழைகளை தூவி பரிமாற ஆரம்பிக்கலாம்.