தீராத நுரையீரல் சளி உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர சரியாகும் என டாக்டர் சிவராமன் தமிழ ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
மழைக் காலங்களில் அல்லது அடிக்கடி நுரையீரல் தொற்று ஏற்படக் கூடியவர்கள் கரிசாலை தேநீர் குடிக்கலாம். கற்பூர வள்ளி, துளசி போன்ற எளிய பொருட்களை சாப்பிடலாம். இது சளி வராமல் தடுக்க உதவும் என சித்த மருத்துவர் சிவராமன் கூறினார்.
அதுமட்டுமின்றி கரிசலாங்கண்ணி எப்போதும் போல சாதாரணமாக சமைத்தும் சாப்பிடலாம். வாரம் இரண்டு மூன்று முறை எடுத்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி கரிசலாங்கண்ணி நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இந்த கீரைக்கு உண்டு.
Advertisment
Advertisements
அதேபோல கண், முகம், வெளுத்த கை, கால் மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.