சீவிய மா, வெள்ளரி சேர்த்து... கர்நாடகாவில் ரொம்ப பேமஸ்; செம்ம ஹெல்தி டிபன்!

காலை உணவுக்கு சுவையான அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம். கர்நாடகா ஸ்டைலில் அவல் உப்புமா கொஞ்சம் காரமாகவும் மனமாகவும் இருக்கும்.

காலை உணவுக்கு சுவையான அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம். கர்நாடகா ஸ்டைலில் அவல் உப்புமா கொஞ்சம் காரமாகவும் மனமாகவும் இருக்கும்.

author-image
WebDesk
New Update
aval upma

உங்கள் காலை உணவுக்கு ஒரு வித்தியாசமான, சுவையான மற்றும் ஆரோக்கியமான மாற்றைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இந்த கர்நாடகா ஸ்டைல் அவல் பிரேக்பாஸ்ட் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இது சமைக்க எளிதானது மட்டுமல்லாமல், பலவிதமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டது. இதனை எப்படி செய்வது என்று ஸ்பைசிசமையல் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் 
தேங்காய் 
சீரகம் 
மாங்காய் 
வெள்ளரிக்காய் 
எண்ணெய் 
கடுகு 
கடலைப்பருப்பு 
உளுந்து 
வேர்க்கடலை 
வரமிளகாய் 
கறிவேப்பிலை 
மஞ்சள் தூள் 
உப்பு 
சிவப்பு அவல்  
கொத்தமல்லி இலைகள் 
எலுமிச்சை சாறு 

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில், ஒரு மிக்ஸர் ஜாரில் மூன்று பச்சை மிளகாய், சுமார் 10 துண்டுகள் தேங்காய், மற்றும் சிறிது சீரகம் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவை தயாரானதும், அதை தனியாக எடுத்து வைக்கவும்.

அடுத்து, ஒரு மாங்காயை நன்கு சீவி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல், ஒரு வெள்ளரிக்காயையும் சீவித் தயாராக வைக்கவும். இந்த இரண்டு காய்களும் இந்த டிஷுக்கு ஒரு தனித்துவமான புளிப்பு மற்றும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

இப்போது, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, வேர்க்கடலை, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளிப்பு பொன்னிறமானதும், அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவைச் சேர்த்து, அதனுடன் சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்கவும்.

மசாலா வாசனையுடன் வதங்கியதும், சீவி வைத்துள்ள மாங்காய் மற்றும் வெள்ளரிக்காயைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை முழுமையாக வேக வைக்கத் தேவையில்லை, லேசாக வதக்கினால் போதும்.

இறுதியாக, சுமார் கால் மணி நேரம் ஊறவைத்த சிவப்பு அவலை (ரெட் ரைஸ் அவல்) இந்தக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் மூடி வைத்து எடுத்தால், சுவையான கர்நாடகா ஸ்டைல் அவல் பிரேக்பாஸ்ட் தயார். 

இந்த பிரேக்பாஸ்ட்டை பரிமாறும் முன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை மேலே தூவலாம். மேலும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம். இது சுவையை மேலும் மேம்படுத்தும். இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். 

Health benefits of consuming poha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: