கர்நாடகா ஸ்டைலில் இட்லி, தோசைக்கு ஏற்ற தும்கூர் சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுபற்றி ஸ்பைசிசமையல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்து
இஞ்சி
பூண்டு
வெங்காயம்
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
தேங்காய்
கருவேப்பிலை
உப்பு
புதினா
கொத்தமல்லி
பெருங்காயத்தூள்
துருவிய தேங்காய்
கடுகு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து போட்டு நிறம் மாறும்வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் அதே கடாயில் பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், புதினா கொத்தமல்லி போட்டு வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
கொஞ்சமாக பெருங்காயம் தூள், துருவிய தேங்காய் சேர்த்து கலந்து ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். பின்னர் அதனுடன் வறுத்து வைத்துள்ள உளுந்து உப்பு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக எப்போதும் போல தாளிப்பதற்காக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து எடுத்தால் சுவையான கர்நாடகா ஸ்டைல் தும்கூர் சட்னி ரெடியாகிவிடும்.