கற்பூரவள்ளி இலை சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
கற்பூரவள்ளி இலை- 30
கறுப்பு உளுந்து- 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 4
தேங்காய்த் துருவல்-4 ஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- சுவைக்கேற்ப
பெருங்காயம்
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, புளி, உளுந்து, மிளகாய்வற்றலை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கற்பூரவள்ளி இலைகளை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
சற்று ஆறிய பின் தேங்காய்த் துருவல் கலந்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அதன்பின் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கலக்க வேண்டும். இந்த சட்னி செய்வதற்கு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அவ்வளவு தான் சிம்பிளான, ஆரோக்கியமான கற்பூரவள்ளி சட்னி ரெடி. இட்லி, தோசை, சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலை சளி, இருமல், அஜீரணம், ஆஸ்துமா போன்றவற்றை சரி செய்ய உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“