Advertisment

ஆப்பிளை விட 10 மடங்கு சத்து அதிகம்… இந்த இலையை சாப்பிடுங்க; மருத்துவர் கௌதமன்

ஆப்பிளை விட பல மடங்கு அதிக சத்துள்ள கற்பூரவல்லியை பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கற்பூரவல்லி

கற்பூரவல்லியின் பயன்கள்

கற்பூரவல்லியை தினசரி சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் 10 பயன்களை பார்க்கலாம். சளி, இருமல் மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் மற்ற சில பிரச்சனைகளை குணப்படுத்தும் இந்த கற்பூரவல்லியை வீட்டில் வளர்ப்பதும் நன்மை பயக்கும். ஒரு ஆப்பிளை விட 10 மடங்கு சத்து அதிகமாக கற்பூரவல்லியில் உள்ளது.

Advertisment

வறட்டு இருமல்: 4 கற்பூரவல்லி இலைகளை எடுத்து தீயில் லேசாக வாட்டி சாறு பிளிந்து தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வர வறட்டு இருமல் நீங்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்க வேண்டாம்.

சிறுநீரகக் கல்: காலை வெறும் வயிற்றில் கற்பூரவல்லியை முன்று எச்சிலுடன் சேர்த்து முழுங்கும்போது சிறுநீரக கல் பிரச்சனை நீங்கும். மேலும் மலச்சிக்கலை போக்கும்.

எதிர்மறை சக்தி: வீட்டு வாசலில் கற்பூரவல்லியை நட்டு வைத்தால் நம் வாழ்வின் எதிர்மறை சக்திகள் நீங்கும். 

Advertisment
Advertisement

சோம்பேறித்தனம்: காலையில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இந்த கற்பூரவல்லி உதவும். இதை மென்றும் சாப்பிடலாம், சாறு எடுத்தும் சாப்பிடலாம்.

தொப்பை குறைவு: உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும். காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் கற்பூரவல்லி இலையை சாப்பிட்டு வர தொப்பை குறையும். 

பித்தப்பைக்கல் :  கற்பூரவல்லி சூரம், முசுமுசுக்கை, சுக்கு மூன்றையும் கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர பித்தப்பை கல் நீங்கும்.

வாய்வுத் தொல்லை: இரவு படுக்கும்போது கற்பூரவல்லி இலையை மென்று சாப்பிட்டு சுடுதண்ணீர் குடித்தால் வாய்வுத் தொல்லை இருக்காது.

என்ன கற்பூரவள்ளியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா? Benefits of Karpuravalli! விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

வயிறு உப்பசம்: காலை உணவு முடிந்த பிறகு ஒரு சிட்டிகை ஓமம், சீரகம் கலந்து சாப்பிட்டால் ஜீரனமின்மை, பசி, வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

மாதவிடாய் கோளாறு: மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வலியை போக்க காலை மாலை 6 மணிக்கு கற்பூரவல்லி இலையை மென்று சாப்பிட்டு வர வலி நீங்கும். 

வளர்சிதை மாற்றத்தை சரி செய்ய உதவும்: ஆப்பிளை விட 10 மடங்கு அதிகமான ஆண்டிஆக்ஸிடெண்ட் கற்பூரவல்லியில் உள்ளது. தினசரி 4 கற்பூரவல்லி இலையை சாப்பிடுவது ஆப்பிள் சாப்பிடுவதற்கு சமமாகும். தினசரி ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலனை தினமும் 4 கற்பூரவல்லி இலையை மென்று சாப்பிட்டாலே போதும் நல்ல பலனையும் பெற்று விடலாம். உடலில் நல்ல மாற்றத்தையும் காணலாம். 

கற்பூரவல்லி இலைகளை வீட்டில் வளர்த்து தினமும் 4 இலைகளை பறித்து சாப்பிடலாம். மேலும் இதனை ஜூஸ் ஆகவும் குடிக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Healthy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment