கார்த்திகை தீபத்துக்கு செய்யக்கூடிய இரண்டு விதமான ரெசிபிஸ் தாங்க பாக்க போறோம். ஒன்று பொறி உருண்டை மற்றொன்று அப்பம். இது ரெண்டுமே ஸ்பெஷலான ரெசிபி. இது தீபத்துக்கு மட்டும் தான் செய்யணும் இல்ல ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்யலாம்.
இப்போ இருக்க குழந்தைகள் நிறைய பேர் பொரி உருண்டை எல்லாம் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு இது செய்து தரலாம். நல்லா ஹெல்தியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.
பஞ்சு போல அப்பம் மற்றும் மொறு மொறுன்னு பொரி உருண்டை எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பொரி
வெல்லம்
உப்பு
நெய்
பச்சரிசி
வெந்தயம்
வாழைப்பழம்
ஏலக்காய்
தேங்காய் துருவல்
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
ஒரு கனமான பாத்திரம் வைத்து அதில் பொரியை மொருமொருன்னு வறுத்து எடுக்கவும். பின்னர் வெல்லம் சேர்த்து கல் பதத்திற்கு காய்ச்சி எடுக்கவும்.
இனிப்பு சுவையை தூக்கிக் கொடுப்பதற்காக வெல்லம் கொதிக்கும் போது சிறிது உப்பும் நெய்யும் சேர்க்கலாம். வெள்ள கரைசலுடன் பொரியை சேர்த்து கரண்டியை விட்டு கிளற வேண்டும்.
பின்னர் இதை உருண்டையாக பிடித்து எடுத்தால் பொரி உருண்டை ரெடியாகிவிடும்.
அப்பம் செய்வதை பார்க்கலாம். ஒரு கிளாஸ் அரிசி ஒரு கிளாஸ் பச்சரிசி ஒரு ஸ்பூன் உளுந்து இரண்டையும் மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் சிறிது வெள்ளம் சேர்த்து வெள்ள கரைசலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கார்த்திகை தீபம் பஞ்சு போன்ற அப்பம் | Pori Urundai Recipe in Tamil | Sweet Appam Recipe in Tamil
ஊறவைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து 2 ஏலக்காய் சிறிது உப்பு, வாழைப்பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.பின்னர் அதில் வெல்ல கரைசலையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் நன்கு மைய மாவு பதத்திற்கு அரைத்தது ஒரு கரண்டியில் எடுத்து இட்லி மாதிரி எண்ணெயில் பொரித்து எடுத்தால் அப்பம் ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“