கருணைக்கிழங்கு என்றால் நிறைய பேருக்கு பிடிக்காது. அதை சாப்பிடுவதை விட சுத்தம் செய்வது தான் மிகவும் பிடிக்காத ஒன்று என்று பலருக்கும் தெரியாது. அதை எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருப்பவர்களுக்காகவே ஒரு கருணைக்கிழங்கு ரெஸிபி டிப்ஸ்.இது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
மோர்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம்
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை:
முதலில் கருணைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி மோர் விட்டு கழுவி தனியே வைக்கவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடவும்.
மசாலா கலவைக்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், சோம்பு தூள், கரம் மசாலா தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
சமைத்த கிழங்கு துண்டுகளை மசாலாவுடன் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் அதை ஊறவிடவும். பிறகு ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
கருணைக்கிழங்கு வறுவல் | Yam Fry Recipe In Tamil | Side Dish For Rice | Karunaikilangu Varuval
கடாய்ல் எண்ணெய் சூடானது அதில் ஊற வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்த்து இருபுறமும் திருப்பி போட்டு வேக விடவும். சிவந்து வந்ததும் எடுத்து பரிமாறலாம்.
அதற்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடலாம்.