இதய நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய பாரம்பரிய அரிசி வகைதான் கருப்பு கவுனி அரிசி. இதனை சாப்பிடுவதால் 200 சதவீதம் கேன்சர் வராமல் தடுக்க முடியும் என டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார். ராம் சிவரீதா ஷார்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி தேங்காய் பால் நாட்டுச்சர்க்கரை ஏலக்காய் தூள் பாதாம்
செய்முறை
Advertisment
Advertisements
கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் காயவைத்து மிக்ஸியில் பவுடர் ஆக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த பவுடரை போட்டு கட்டி இல்லாமல் கலக்கவும். அடுத்ததாக நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
நன்கு கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவைக்கு மேலே பாதாம் சீவி சேர்க்கலாம்.
மற்ற அரிசிகளைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. கருப்பு கவுனி அரிசியில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக அந்தோசயினின் என்கிற சேர்மம் அதற்கே உரிய தனித்துவமான அடர் நிறத்தை அளிக்கிறது. அவை ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகளையும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு குணநலன்களையும் கொண்டுள்ளன.
கருப்பு கவுனி அரிசியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரி சூழலையும் ஊக்குவிக்கிறது.
கூடுதலாக, இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் மெதுவாக வெளியிடப்படுவதில் உதவுகிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும், நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. செரிமான ஆரோக்கியத்தை இயற்கையாகவே ஆதரிக்க கருப்பு கவுனி அரிசி ஒரு சிறந்த வழியாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.