வீட்டுல கருவேப்பிலை இருக்கா? காய்கறியே இல்லாம ஹெல்தி குழம்பு இப்படி பண்ணுங்க!
கறிவேப்பிலையில் ஃபைபர், புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உள்ளது. இவை உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை சிக்கல்களையும் நிர்வகிக்க உதவுகின்றன.
கறிவேப்பிலை அல்லது கறி இலைகள் என அழைக்கப்படும் இந்த அற்புதமான மூலிகை சமையல் பயன்பாடுகளைத் தவிர, மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாகவும் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்பதோடு தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றன.
Advertisment
இவற்றில் ஃபைபர், புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உள்ளது எனவும், கறி இலைகள் – உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை சிக்கல்களையும் நிர்வகிக்க உதவுகின்றன எனவும் உணவியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படியாக ஏராளமான நற்பயன்களை கொண்டுள்ள கருவேப்பிலையை வைத்து ஹெல்த்தியான குழம்பு எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை - ஒரு கை பிடி எண்ணெய் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகு - 5 வெங்காயம் - சிறிதளவு பூண்டு - சிறிதளவு வர மிளகாய் - 2 தக்காளி - 5 (மிக்சியில் அரைத்தது) மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன் மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு புளி - ஒரு எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு பெருங்காயத்தூள்
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு கடாய் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடற்றவும். பிறகு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு அவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
இதனிடையே, ஒரு கடாய் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு, வர மிளகாய் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இதன்பின்னர், மிக்சியில் அரைத்த தக்காளியைச் சேர்க்கவும்.
பிறகு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வைத்து வதக்கவும். இதன்பின்னர், அரைத்து வைத்துள்ள கருவேப்பிலையை சேர்க்கவும். அத்துடன் புளி பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும். பிறகு, உப்பு மற்றும் கடைசியாக பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
இவை அனைத்தையும் சேர்த்த பிறகு எண்ணெய் திரிந்து மேலே வரும் வரை நன்கு சுண்ட வைத்துக் கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த கருவேப்பிலை குழம்பு தயார்.