கறிவேப்பிலை- 2 கைப்பிடி அளவு
வெங்காயம்- 1
சீரகம்- 1/2 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
பட்டை- 1
கிராம்பு 2
சோம்பு 1 டீஸ்பூன்
தக்காளி- 1
துவரம் பருப்பு - 1 கப்
நெய்- 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்- 3 கப்
உப்பு- தேவையான அளவு
மிளகுத் தூள்- தேவையான அளவு
செய்முறை
முதல் அடுப்பில் குக்கர் வைத்து நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அடுத்து கறிவேப்பிலை, வெந்த துவரம் பருப்பு, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு இரண்டு விசில் விடவும். விசில் வந்ததும் மூடியைத் திறந்து வடிகட்டவும். வடிகட்டிய வைத்த சூப்பில் மிளகுத்தூள் தூவி சூடாக கறிவேப்பிலை சூப்பை பறிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“