கத்தரிக்காய்– 1/4 கிலோ
எண்ணெய்- 2 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
பட்ட மிளகாய்- 2
சீரகம்- 1 ஸ்பூன்
பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு
புளி கரைசல்- 1/2 கப்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
வெல்லம்- 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை ஆன் செய்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொளுங்கள்.
பிறகு, சுட்ட கத்தரிக்காவின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அதை மசிக்கவும். அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுத்து கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து கலக்கவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எப்போதும் போல் தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க்கவும்.
இப்போது இதை தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்க்கவும். அவ்வளவு தான் புதுவித ரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“