இன்றைய காலத்தில் நாம் அனைவருமே மறந்து போன ஒரு உணவான கழனி புளிச்சாறு அதுவும் நம் பாட்டி தாத்தா காலங்களில் மிகவும் ஃபேமஸாக இருந்த இந்த கழனி புளிச்சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
சுவையான கழனி புளிச்சாறு இன்றைய காலத்திற்கு நினைவூட்டும் வகையில் சக்கர சாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
அரிசி தண்ணீர் புளி எண்ணெய் கடுகு உளுந்து சீரகம் வெந்தயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சின்ன வெங்காயம் பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் உப்பு கொத்தமல்லி தழை
Advertisment
Advertisements
செய்முறை
அரிசி கழுவிய தண்ணீரில் புளி கரைத்து விடவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள் எல்லாத்தையும் வதக்கி விடவும்.
பின்னர் மஞ்சத்தூள், உப்பு சேர்த்து இந்த புளி கரைசலையும் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கெட்டியாகி வந்ததும் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி சூடான சாதத்திற்கு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.