வெங்கடேஷ் பட்டின் புது ரெசிபி. ஒரு முறை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
6 வத்தல்
1 ஸ்பூன் சீரகம்
3 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் உளுந்து
1 மூடி தேங்காய்
200 கிராம் துவரம் பருப்பு
கால் ஸ்பூன் மஞ்சள்
1 ஸ்பூன் கடுகு
4 வத்தல்
1 கொத்து கருவேப்பில்லை
1 கட்டு முளக்கீரை
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
உப்பு
அரை ஸ்பூன் காயப் பொடி
1 ஸ்பூன் நெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் வத்தல், சீரகம், மிளகு, உளுந்து சேர்த்து கிளரவும். தொடர்ந்து தேங்காய் துருவலை சேர்க்கவும். தேங்காய் நன்றாக நிறம் மாற வேண்டும். நாம் வறுத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, மிளகாய் வத்தல், சேர்த்து கிளரவும். கீரை நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து உப்பு, மஞ்சள் பொடி, காயப் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் பருப்பு வேக வைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து நெய் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“