பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்காத ஒரு உணவு என்றால் கீரை தான். ஆனாலி கீரையில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, கண் பார்வை குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி, நார்ச்சத்து என அதன் பலன்களை அடுக்கி கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட சத்துக்கள் நிறைந்த கீரையை நம்மில் பலரும் சாப்பிட மறுக்கிறார்கள். கீரையில் எந்த உணவு செய்தாலும் சாப்பிட மறுப்பவர்களுக்கு ஒரு முறை கீரையில் இந்த மாதிரி தொக்கு செய்து கொடுங்கள் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கீரை
பெரிய வெங்காயம்
பூண்டு
உப்பு
மிளகாய் தூள்
நெய்
நல்லெண்ணெய்
கடுகு
சீரகம்
வெந்தயம்
வரமிளகாய்
பெருங்காயத்தூள்
செய்முறை
ஏதேனும் ஒரு கீரையை எடுத்து சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம்,பூண்டு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்
நெய் நல்லெண்ணெய் பெருன்காயத்தூள் கடுகு சீரகம், வெந்தயம் வரமிளகாய் அரைத்த மசாலா உப்பு பச்சை வாசம் நீங்கை கைஇரை சேர்டதது குக் பண்ணி புளி கரைசல் சேரஹ்த்டு
ஒரு கடாயில் நெய், நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும்.
கீரை தொக்கு I keerai thokku
அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பச்சை வாசம் நீங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்க்கவும். கீரையை சேர்த்தது திறந்து வைத்து வேக வைக்கவும். பின்னர் நன்கு குழைய வேகவிட்டு சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“