/indian-express-tamil/media/media_files/2025/05/16/VSHHih1yQq2V16FW9iWR.jpg)
கேரளாவின் சமையல் பாரம்பரியத்தில் மாங்காய் சம்மந்திக்கு ஒரு தனி இடமுண்டு. மதிய உணவிற்கு தொட்டுக்கொள்ள இது மிகவும் ருசியான மற்றும் எளிமையான ஒரு ரெசிபி. புளிப்பும் காரமும் கலந்த இந்த சம்மந்தி எப்படி செய்யலாம் என்று ஸ்பைஸி சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நடுத்தர அளவு மாங்காய்
சாதாரண பச்சை மிளகாய்
காஷ்மீரி மிளகாய்
தேங்காய் எண்ணெய்
சிறிய வெங்காயம்
இஞ்சி
கறிவேப்பிலை
துருவிய தேங்காய்
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு நடுத்தர அளவு மாங்காயை நன்றாக கழுவி, தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து, அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து, அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும், எடுத்து வைத்துள்ள சாதாரண மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாயை சேர்த்து லேசாக வறுக்கவும். மிளகாய் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். வறுத்த மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், இஞ்சி துண்டுகள், கறிவேப்பிலை மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
இறுதியாக, நறுக்கிய மாங்காய் துண்டுகளையும், தேவையான அளவு உப்பையும் மிக்ஸி ஜாரில் போடவும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல், இந்த கலவையை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் நைசாக அரைக்காமல் இருப்பது சுவையை அதிகப்படுத்தும். இப்போது சுவையான கேரளத்து மாங்காய் சம்மந்தி தயார்.
இதை சூடான சாதத்துடன் பரிமாறவும். கூடவே சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். இந்த மாங்காய் சம்மந்தி செய்வதற்கு மிகக் குறைவான நேரமே எடுக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக செய்துவிடலாம்.
மாங்காயின் புளிப்பு சுவையும், மிளகாயின் காரமும், தேங்காயின் இனிப்பும் சேர்ந்து உங்கள் மதிய உணவிற்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.