கேரளா ஸ்டைலில் புது விதமாக சுவையான அப்பம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா- 1 கப்
முட்டை- 1
உப்பு, சர்க்கரை- தலா 1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி- 1 டீஸ்பூன்
பால்- அரை கப்
தேங்காய் பால்- 1 கப்
தேங்காய் துருவல்- 1 கப்
நெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, 1 ஸ்பூன் உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். மாவுக் கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த மாவுக் கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த அப்பத்தின் நடுவே தேங்காய் துருவல் கலவையை வைத்து சேர்த்து அதனை சுருட்டி எடுக்கவும்.
அவ்வளவு தான் இப்போது பரிமாறும் போது அதன் மேல் தேங்காய் பால் ஊற்றி பரிமாறவும். சுவையான கேரளா ஸ்டைல் அப்பம் அல்லது சுருளப்பம் ரெடி. காலை உணவாக அல்லது ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக கூட இதை எடுத்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“