கேரளா உணவு வகைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் கேரளாவில் மிகவும் ஃபேமஸாக இருக்கும் கேரளா ஸ்டைல் கறி மீன் பொளிச்சது மிகவும் சுவையாக இருக்கும்.
Advertisment
எப்போதும் போல மீன் வருவல் இல்லாமல் இந்த மாதிரி செய்து சாப்பிடுவது இன்னும் சுவையாகவும் இருக்கும். அவ்வளவு சுவை நிறைந்த கேரளா ஸ்டைல் கறி மீன் பொளிச்சது வீட்டில் எப்படி செய்வது என்று இந்து குக்கிங் டைம் யூடியூப் பக்கத்தில் செய்து காட்ட் இருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள் மிளகாய் தூள் மிளகுத்தூள் தனியா தூள் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய் கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தக்காளி புளித்தண்ணீர் சோம்புத்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் கொத்தமல்லி தழை
Advertisment
Advertisements
செய்முறை
முதலில் இதற்கு மீன் மசாலா பொடி ரெடி செய்து கொள்ள வேண்டும். கடைகளில் வாங்கும் பொடி பயன்படுத்தாமல் இதனையும் வீட்டிலேயே தயார் செய்யலாம்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள், தனியா தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு சேர்த்து இவை அனைத்தையும் கலந்து கொள்ளவும். பின்னர் இதனை மீன் மீது தடவி ஊற வைக்க வேண்டும். ஒரு தோசை கல்லை காயவைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து மேலே இந்த மீனை போட்டு இரண்டு பக்கமும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் என்னை சேர்த்து கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, புளித்தண்ணீர் சிறிது சேர்த்து தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் இதன் மீது சோம்புத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கலந்து மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவவும்.
பின்னர் ஒரு வாழை இலை எடுத்து இதில் இந்த மசாலாவை வைத்து மேலே வருத்த மீனை வைத்து மேலே மீண்டும் மசாலாவை வைத்து வாழை இலையை நார் வைத்து கட்டி விடவும். பின்னர் இதனை சூடான தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வாட்டி எடுத்தால் போதும் சுவையான கேரளா ஸ்டைல் கறி மீன் பொளிச்சது ரெடி ஆகிவிடும்.