பாசிப் பருப்பு உடலுக்கு நல்லது. வீட்டிலேயே ஆரோக்கிய உணவுகள் செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு சிறந்தது. அந்த வகையில் கேரளா ஸ்டைல் பாசிப் பருப்பு பாயாசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு- 1 கப்
வெல்லம் – 1 கப் (துருவியது)
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
நீர் போன்ற தேங்காய் பால் – இரண்டரை கப்
முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது அதே கடாய்யில் பாசிப் பருப்பை சேர்த்து மிதமாக வறுத்து எடுக்கவும்.
பிறகு அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். பருப்பு நன்கு தீயில் வெந்ததும் வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும். இறுதியில் அதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்துடன் மீதமுள்ள நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவு தான், சுவையான கேரளா ஸ்டைல் பாசிப் பருப்பு பாயாசம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“