ஈவ்னிங் எல்லோருக்கும் லைட்டாக பசிக்கும். அப்போ வெறும் பஜ்ஜி, போண்டா, கேக் செய்து சாப்பிட்டு போர் அடித்து விட்டது என்றால் ஒருமுறை கேரளா ஸ்டைல் புட்டு செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 4 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
வெல்லத்தூள் - 2 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன்
முந்திரி
வேர்க்கடலை
பரங்கிக்காய் விதை
உப்பு
செய்முறை :
அரிசியை 4 மணி நேரம் ஊறவிட்டு கழுவி நீரை வடித்துவிட்டு ஈரமாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.
மாவை நன்றாக சலித்து வெறும் கடாயில் பொன்னிறமாக வறுக்கவும். கொஞ்சமாக உப்பு கரைத்த நீரை ஆறிய மாவில் தெளித்து புட்டு மாவு போல் பிசிறி பத்து நிமிடம் மூடி ஊற வைக்கவும்.
பிறகு அதில் தேங்காய் துருவலை கலந்து இட்லி பாத்திரம் அல்லது புட்டு குழாயில் போட்டு ஆவியில் வேக விடவும். இடையிடையே கிளறி, தேவையானால் நீர் தெளித்து மூடி வைக்கவும்.
வெந்ததும் இறக்கி வெல்ல பாகு, சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். நெய், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்க்கவும். நல்ல மணமாகவும் இன்னும் சுவை தூக்கலாகவும் இருக்கும்.
முந்திரி, வேர்க்கடலை, பரங்கிக் காய் விதை ஆகியவற்றை நெய்யில் வறுத்து இதில் சேர்த்து பரிமாற ஆரம்பிக்கலாம். வயிறும் நிறைந்து விடும். ஒரு நல்ல சுவையா வித்தியாசமான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.