குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? சித்த மருத்துவர் சிவராமன் சொல்லும் தீர்வு இதுதான்!

சளி, இருமலுக்கு மிளகு ஒரு சிறந்த மருந்தாகும். குழந்தைகளுக்கு மிளகு கட்டாயம் கொடுக்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

சளி, இருமலுக்கு மிளகு ஒரு சிறந்த மருந்தாகும். குழந்தைகளுக்கு மிளகு கட்டாயம் கொடுக்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Kids Cold

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதை தடுப்பதற்கு  சித்த மருத்துவர் சிவராமன் தீர்வு சொல்கிறார். சளி பிடிக்கிறது என்றால் முதலில் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். ஆஸ்துமா, சைனஸ் என்றால் அதற்கான சிகிக்சை எடுக்க வேண்டும். உணவில் மாற்றம் கொண்டு வந்தால் இதை தடுக்க முடியும். சரியான உணவு திட்டமிடல் இருந்தால் அந்த நோயில் இருந்து விரைந்து விடுபடலாம். 

Advertisment

முதலில் இனிப்பு வகைகள் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு சாக்லேட், இனிப்பு  பண்டங்கள் கொடுக்க கூடாது. அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு குறிப்பாக நெஞ்சில் கபம் இருக்கும் குழந்தைகளுக்கு இதை தவிர்க்க வேண்டும்.

இதை தவிர துவர்ப்பு, காரம், உவர்ப்பு சுவை உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிட வைக்க வேண்டும். முக்கியமான பைபர் நையகரம் என்று சொல்லக் கூடிய கரு மிளகு சேர்க்க வேண்டும். எங்கு எல்லாம் காரம் தேவைப்படுகிறதோ அங்கு இந்த  மிளகு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.  குழந்தைகள் மிளகை முழுமையாக சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 5-6 மிளகு சாப்பிட வேண்டும்.

Advertisment
Advertisements

மிளகில்  பைபரின் பைரடிரின் என்ற 2 ஆஸ்கலாட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. சளியை விலக்கி வெளி ஏற்றக் கூடிய தன்மை உள்ளது. இது இன்றைய அறிவியல் சொல்கிறது.

அதோடு வீசிங், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும்  மிளகு பயன்படுகிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சித்த மருத்துவர் சிவராமன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: