சமீபத்தில், கிங்காங் மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் அவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக ஒரு பிரம்மாண்டமான விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வு வாழை இலைகளில் பரிமாறப்பட்ட பல்வேறு வகை உணவுகளுடன், விருந்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சினி உலகம் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
Advertisment
வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் கிங்காங். ஷங்கர் ஏழுமலை என்ற இவர், கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரிலே திரையுலகில் பயணித்து வருகிறார்.
ஜூலை 10-ம் தேதி காலை கிங்காங் மகள் கீர்த்தனா-நவீன் ஆகியோரின் திருமணம் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் நடைபெற்றது. திருமண கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின்னர் கிங்காங் தனது நண்பர்களுக்கு விருந்து வைத்தார். இந்த விருந்தில் சுவையான மட்டன் பிரியாணி, மொறுமொறுப்பான சிக்கன் 65, மற்றும் பிற பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்படும் காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
கிங்காங் தனது விருந்தினர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி, அவர்கள் திருப்தியாக உண்பதை உறுதிசெய்தார். உணவு மற்றும் நிகழ்வைப் பற்றி அவர் நகைச்சுவையாகப் பேசியது விருந்தின் கலகலப்பான சூழலை மேலும் அதிகரித்தது. திரைப்பிரபலங்கள் உட்பட பல விருந்தினர்கள், கிங்காங்குடன் உரையாடி, உணவை ரசித்தனர். இந்த விருந்தில் கூல் சுரேஷ் கலந்துக்கொண்டார். கிங்காங் உடன் காமெடி படங்களில் நடித்த நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Advertisment
Advertisements
கிங்காங் தனது குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்காக மட்டுமே இதுபோன்ற தனிப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதாக கூறினார். கேப்டன் விஜயகாந்த் மீது தனக்குள்ள மரியாதையையும், மக்களுக்கு உணவு பரிமாறும் அவரது வழியைப் பின்பற்றுவதாகவும் கிங்காங் கூறினார். விருந்தின் முடிவில், கிங்காங் தனது விருந்தினர்களுடன் ஒரு குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த விருந்தில் கூல் சுரேஷ் உள்ளிட்ட சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்கள் கலந்துக்கொண்டார்கள். விருந்தில் மட்டன் பிரியாணி, கேரட் அல்வா, பாயாசம், மட்டன் கிரேவி, சிக்கன் 65, நல்லி சூப் உள்ளிட்டவை பரிமாறப்பட்டது.