நம் உடல் சமநிலையில் இருக்க, உப்பு அவசியம். நிச்சயமாக, உணவை சுவையாக மாற்ற இது ஒரு முக்கிய மூலப்பொருள். உண்மையில், நாம் சாப்பிட ஆசைப்படும் ஒரே கல் உப்புதான்! ஆனால் சில ஆச்சரியமான சமையலறை ஹேக்குகளுக்கு உப்பு ஒரு ஸ்மார்ட் கருவியாகும். இங்கே பாருங்கள்:
1. சுத்தம் செய்ய
பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் எரிந்த உணவை சுத்தம் செய்வது பெரிய வேலை. கை வலிக்க பானையை தேய்த்தாலும் எரிந்த கறை முழுமையாக நீங்காது. எனவே வாணலிகள் மற்றும் பானைகளில் எரிந்த உணவை சுத்தம் செய்ய உப்பு பயன்படுத்தவும்.
சோப்பு நீரில் அழுக்கு பாத்திரங்களை ஊறவைப்பதற்கு பதிலாக, பாத்திரத்தின் அடியில் சிறிது உப்பு சேர்க்கவும். 10 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் வழக்கம் போல் சுத்தம் செய்யவும்.
2. பானங்களை வேகமாக குளிர்விக்க

இது ஒரு சரியான சம்மர் ஹேக்! குளிர்ந்த நீரில் உப்பு சேர்ப்பதால் வெப்பநிலை 32 டிகிரி F க்கு கீழே சரிகிறது. எனவே நீங்கள் எப்போதாவது தாகமுள்ள விருந்தினர்களுடன் சிக்கிக்கொண்டால், கவலைப்பட வேண்டாம்.
கூலர் அல்லது பெரிய பானையில் ஐஸ், தண்ணீர் மற்றும் நிறைய உப்பு சேர்த்து. பானங்களை மூழ்குமாறு வைக்கவும்- 3 முதல் 5 நிமிடங்கள் வரை காத்திருங்கள். உப்பு பனியை வேகமாக உருகச் செய்யும், இது உங்கள் பானங்களை மிக வேகமாக குளிர்ச்சியாக்கும்.
3. உடைந்த முட்டையை சுத்தம் செய்ய
நாம் அடிக்கடி முட்டையை உடைக்க முயற்சித்து, தடுமாறிய விரல்களுக்கு இடையில் தரையில் போட்டு உடைத்திருப்போம். இதை ஒரு சோப்பு ஈரமான துணியால் சுத்தம் செய்வது கடினமானது. அதற்கு பதிலாக, முட்டையின் மீது உப்பு ஒரு அடுக்கை பரப்பி, 10 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் அதை ஒரு துணி அல்லது காகித துண்டு கொண்டு துடைக்கவும். சுலபம்!
4. பாத்திரம் கழுவும் சோப்புக்கு பதிலாக

மளிகைக் கடையில் பாத்திரம் கழுவும் சோப் வாங்க மறந்து மறந்துவிட்டீர்களா? கவலை இல்லை. நீங்கள் சொந்தமாக வீட்டிலேயே டிஷ் வாஷர் செய்யலாம்:
1 கப் பேக்கிங் சோடா 1 கப் வாஷிங் சோடா, 1 கப் கோஷர் உப்பு மற்றும் 3 எலுமிச்சைப் பழத்துடன் சேர்க்கவும். உங்கள் டிஷ் வாஷர் சோப் ரெடி. வழக்கமான சுமைக்கு, 1 தேக்கரண்டி, கடினமான வேலைகளுக்கு 2 தேக்கரண்டி பயன்படுத்தவும்.
பிளெண்டர் பிளேடுகளை கூர்மைப்படுத்த
மசாலா, மாவு அல்லது வேறு எந்த உணவாக இருந்தாலும், பிளெண்டர் நமக்கு உதவும். ஆனால் அதிகப்படியான பயன்பாடு அதன் கத்திகளை மழுங்கச் செய்துவிடும். கல் உப்பைப் பயன்படுத்தி உங்கள் பிளெண்டரின் பிளேடுகளை கூர்மையாக வைத்திருக்கலாம். உங்கள் பிளெண்டரில் சிறிது கல் உப்பை வைத்து, உங்கள் பிளேட்கள் கூர்மையாக இருக்க, ஒரிரண்டு முறை அடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“