அரிசி, இந்திய உணவின் பிரதானம். ஒரு நேரம் அரிசி சாதம் சாப்பிடாத யாரையும் தமிழகத்தில் பார்க்க முடியாது. இருப்பினும், பிரியாணி முதல் ஃபிரைடு ரைஸ் வரை, அரிசி சமைக்க ஒரு பக்குவம் தேவை. ஒவ்வொரு தானியத்துக்கும், ஒவ்வொரு கழுவும் முறை மற்றும் சமையல் முறைகள் தேவைப்படுகிறது.
நீங்கள் விரும்பும் பஞ்சுபோன்ற, சுவையான அரிசி சாதம் பெறுவதற்கு, தவிர்க்க வேண்டிய சில தவறுகள் இங்கே உள்ளன:
நீண்ட அரிசி எப்படி சமைப்பது?
உங்களிடம் வெள்ளை, பிரெளன் அரிசி, ஜாஸ்மின் மற்றும் பாசுமதி போன்ற நீண்ட அரிசி இருந்தால், சமைப்பதற்கு முன் அரிசியைக் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரிசியை குளிர்ந்த நீரில் நன்றாக சல்லடை மூலம் கழுவ வேண்டும். இது, அதில் எஞ்சியிருக்கும் அதிகப்படியான ஸ்டார்ச் மற்றும் ரசாயனங்களை அகற்ற உதவுகிறது. அரிசியைக் கழுவிய பின் மற்றும் சமைப்பதற்கு முன் எப்போதும் 30 நிமிடம் ஊறவைக்கவும்.
அரிசி மற்றும் தண்ணீர் 1:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். 1000 கிராம் அரிசிக்கு 1000மிலி தண்ணீர் வேண்டும், அரிசி ஊறவைத்த பிறகு, தண்ணீரை 800மிலியாக குறைக்க வேண்டும்.”
குறைந்த தீயில் சமைக்கவும்.
அரிசி என்று வரும்போது குறைந்த தீயில் சமைப்பதே நல்லது. அரிசியை அதிக தீயில் வேகவைக்க முயற்சிக்காதீர்கள். மிதமான தீயில் சமைப்பது தானியங்களை அப்படியே வைத்திருக்கிறது மற்றும் எரிவதைத் தடுக்கிறது
பாசுமதி, ஜாஸ்மின் மற்றும் பெக்கன் அரிசி ஆகியவை ’2-அசிடைல்-1-பைரோலின்’ என்ற வேதிப்பொருளில் இருந்து அவற்றின் தனித்துவமான நறுமணத்தைப் பெறுகின்றன.
நீண்ட நேரம் சமைக்கும்போது இந்த இரசாயனம் சிதைந்துவிடும். இதன் காரணமாக, நீங்கள் அரிசியை முதலில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும், ஏனெனில் இது சரியான அமைப்பைப் பெற, குறைந்த நேரத்தில் இந்த அரிசியை சமைக்க உதவும்.
அரிசி எப்படி சேமிப்பது?
அரிசி பூச்சியில்லாமல் இருப்பதை உறுதிசெய்ய சில எளிய வழிகள் உள்ளன.
அரிசியில் பூச்சி வராமல் இருக்க பிரியாணி இலை அல்லது வேப்ப இலைகளை கொள்கலன்களில் வைக்கலாம்.
உரிக்கப்படாத பூண்டு பற்களை அரிசி பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். பூண்டு காய்ந்தவுடன் மீண்டும் அவற்றை மாற்றவும்.
அரிசி அதிகளவு வண்டுகளால் தாக்கப்பட்டிருந்தால், அதை சூரிய ஒளியில் வைக்கவும். பூச்சிகள் இருண்ட மற்றும் ஈரமான இடங்களில் ஊர்ந்து செல்லும், அதேநேரம், அவை சூரிய ஒளியை விரும்புவதில்லை. இதை ஒரு வழக்கமான சுகாதார பயிற்சியாக ஆக்குங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“