தேங்காய் பால் இப்படி சேர்க்கணும்; பஞ்சு போன்ற ஆப்பம் ரகசியம் இதுதான்: செஃப் தீனா

ஆப்பம் சாஃப்ட்டாக வர வேண்டுமா? தேங்காய் பாலை இந்த சமயத்தில், இந்த அளவில் சேருங்கள்; செஃப் தீனா ரெசிபி இங்கே

ஆப்பம் சாஃப்ட்டாக வர வேண்டுமா? தேங்காய் பாலை இந்த சமயத்தில், இந்த அளவில் சேருங்கள்; செஃப் தீனா ரெசிபி இங்கே

author-image
WebDesk
New Update
Appam Recipe Chef Deena in tamil

ஆப்பம் – தேங்காய் பால் காம்பினேஷன் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அதேநேரம் வீடுகளில் நம்மால் சரியாக ஆப்பம் ஊற்ற முடியாது. ஆனால் இந்த எளிய செயல்முறை தெரிந்துக் கொண்டால் நீங்கள் உங்கள் வீட்டில் ஆப்பம் செய்யலாம்.

Advertisment

ஈஸ்ட், சமையல் சோடா என எதுவும் சேர்க்காமல், மிருதுவான ஆப்பம் செய்யும் செயல்முறையை செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 400 கிராம்

Advertisment
Advertisements

பச்சரிசி – 400 கிராம்

உளுந்து – 100 கிராம்

வெந்தயம் – 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் – தேவையான அளவு

சர்க்கரை – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு நன்றாக அலசிய பின்னர், தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நன்றாக ஊறிய பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இதனை அப்படியே 12 மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.

12 மணி நேரத்திற்கு மாவை எடுத்து, கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்துக் கொள்ள வேண்டும். 

இப்போது தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட பாலில் சர்க்கரை சேர்த்து, அதனை மாவுடன் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். 

இதனை அடுப்பில் சூடாக இருக்கும் ஆப்பச்சட்டியில் ஊற்றி, ஆப்பம் செய்துக் கொள்ளவும். இந்த சிம்பிள் செயல்முறையை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: