அடுப்பில் வைத்த பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்வது சற்று சிரமமான வேலை தான். ஆனால் இந்த எளிய டிப்ஸை ஃபாலோ பண்ணினால், இனி பால் பொங்கும், ஆனால் வெளியில் வழியாது. அந்த டிப்ஸ் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
பால் பொங்கி வருவதை தடுக்கும் டிப்ஸ் ட்ரீட்ஸ் அண்ட் விலாக் பை நசிகா என்ற யூடியூப் சேனல் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நம் வீடுகளில் தயிர் உறைய உறை மோர் ஊற்றி வைத்தாலும், சீக்கிரம் உறையாது, அல்லது விரைவாக புளித்து விடும். குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் சீக்கிரம் உறையாது. இதனை சரி செய்ய நன்றாக காய்ச்சி பாலை ஒரு சில்வர் பாத்திரத்தில் வைத்து, உறை மோர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை அப்படியே மூடி, ஒரு ஹாட் பாக்ஸூக்கு வைத்து மூடி விட வேண்டும். சில மணி நேரங்கள் கழித்து எடுத்தால், தயிர் நன்றாக உறைந்திருக்கும்.
நாம் என்னதான் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தாலும் அடுப்பில் வைத்த பால் பொங்கிவிடும். இது எல்லா வீடுகளிலும் இயல்பாக நடப்பது தான். சிலர் பாலை அடுப்பில் வைத்துவிட்டு வேறு வேலை பார்த்துக் கொண்டிருப்பதால், அதனை மறந்துவிடுவார்கள். வேறு சிலருக்கு பால் அடுப்பில் இருக்கும்போது தான் போன் வரும், இதனால் பாலை மறந்து விடுவார்கள். பால் பொங்கி அடுப்பு மற்றும் சமையல் அறையில் கொட்டிவிடும்.
இதனை தடுக்க சிம்பிள் வழி ஒன்று உண்டு. நீங்கள் பாலை அடுப்பில் வைத்து கேஸை மீடியம் ஃபிளேமில் வைத்து விட்டு, பாத்திரத்தின் மேல் சில்வர் வடிகட்டியை வைத்து விடுங்கள். பொங்கி வரும் பாலை சில்வர் வடிகட்டி தடுத்துவிடும். அப்புறம் என்ன இதை உங்கள் வீட்டில் டிரை பண்ணுங்க. எப்போதும் பால் கொட்டாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“