நம்மில் பெரும்பாலானோருக்கு காலை மாலை இரண்டு வேளையும் இட்லி, தோசை தான் உணவு. இதற்காக வீடுகளில் மாவை அரைத்து ப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது ஊற்றி வருவார்கள். ஆனால் கொஞ்ச நேரம் வெளியில் வைத்திருந்தாலே, வெயில் காலங்களில் மாவு சீக்கிரம் புளித்து விடும். மேலும் அடிக்கடி ப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்து சமைத்து வந்தாலும் சீக்கிரம் புளித்து விடும்.
Advertisment
மாவு புளித்து விட்டால், இட்லி, தோசை சரியாக வராது, சாப்பிட முடியாது. ஆனால் புளித்த மாவை ஒரு எளிய செயல்முறை மூலம், பக்குவமான மாவாக மாற்றலாம்.
இதற்கு கால் மூடி தேங்காய் போதும். கால் மூடி தேங்காயை நறுக்கி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து தேங்காய் பாலை தனியாக எடுத்து மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இட்லி செய்வதாக இருந்தால், குறைவான தண்ணீர் சேர்த்து தேங்காய் அரைத்துக் கொள்ள வேண்டும். அதேநேரம் தோசை சுடுவதாக இருந்தால், தண்ணீர் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால் சேர்த்த மாவு புளிக்காது, இதனை நீங்கள் இட்லி, தோசையாக செய்து, அதே சுவையோடு சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“