செஃப்-களுக்கு டஃப் கொடுக்கலாம்... இந்த டிப்ஸ்களை மட்டும் மிஸ் பண்ணாதீங்க!

ஊறுகாய் முதல் இனிப்பு வகைகள் வரை, சமையல் ரகசியங்களை எளிமையாக்கும் சில குறிப்புகள் உங்கள் சமையல் கலையை மேலும் மெருகேற்றும். உணவுப் பொருட்களைச் சேமிப்பது, பாத்திரங்களைப் பராமரிப்பது, மற்றும் சமையல் நுட்பங்களை மேம்படுத்துவது எப்படி என பார்ப்போம்.

ஊறுகாய் முதல் இனிப்பு வகைகள் வரை, சமையல் ரகசியங்களை எளிமையாக்கும் சில குறிப்புகள் உங்கள் சமையல் கலையை மேலும் மெருகேற்றும். உணவுப் பொருட்களைச் சேமிப்பது, பாத்திரங்களைப் பராமரிப்பது, மற்றும் சமையல் நுட்பங்களை மேம்படுத்துவது எப்படி என பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
cooking

ஓ! ரகசியம் அவிழப் போகிறது. சிலரின் சமையல் ஏன் எப்போதும் பிரமாதமாக இருக்கிறது? அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சூட்சுமம் என்ன? வெறும் பொருட்கள் மட்டுமல்ல, சில நுட்பமான ரகசியங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. வாருங்கள், அந்த ரகசிய சமையல் குறிப்புகளின் பெட்டகத்தைத் திறந்து பார்ப்போம். 

Advertisment

டிப்ஸ் 1: சமையலுக்குப் பயன்படுத்திய கரண்டிகள், ஸ்பூன்கள் போன்றவற்றை அப்படியே பரிமாறாமல், கழுவிப் பயன்படுத்தினால் அது பார்ப்பதற்கும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும். கேசரி அல்லது அல்வா போன்றவற்றை பரிமாறும்போது, குழி கரண்டியின் உள்பக்கத்தில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி எடுத்து வைத்தால், அது அழகான கோள வடிவில் வரும்.

டிப்ஸ் 2: ஊறுகாயை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க, அதில் உள்ள உப்புடன் வினைபுரியாமல் இருக்க மரகரண்டி அல்லது பீங்கான் கரண்டிகளை பயன்படுத்தலாம். இதேபோல், சிகப்பு மிளகாயை தாளிக்கும் முன் இரண்டாக வெட்டி ஒரு டப்பாவில் சேமித்து வைத்தால், தேவைப்படும்போது உடனடியாகப் பயன்படுத்தலாம்.

டிப்ஸ் 3: வீட்டில் முளைகட்டிய பயறு வகைகளை சுண்டலாகவோ அல்லது புட்டு போன்ற உணவுகளாகவோ சமைத்து சாப்பிடும்போது, சுவையும் சத்தும் அதிகரிக்கும். இதேபோல், சமைக்கும்போதே நட்ஸ், வறுத்த கடலை மற்றும் முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடுவது அசிடிட்டி போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். விலை உயர்ந்த குங்குமப்பூவைப் பயன்படுத்த, சர்க்கரை பாகில் குங்குமப்பூ சேர்த்து சிரப் தயாரித்து வைத்துக் கொண்டால், அதன் சுவையும், நிறமும் வீணாகாமல் பயன்படுத்தலாம்.

Advertisment
Advertisements

டிப்ஸ் 3: பருப்பு பாயசம் செய்ய, பருப்பை வறுத்து ரவையாக்கி, இரண்டாம் பாலில் வேக வைத்து, மில்க் மெய்ட், வறுத்த நட்ஸ், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் சேர்த்து இறக்கினால், சுவையான, சத்தான பாயசம் கிடைக்கும். இனிப்பு பலகாரங்களுக்கு சுவை கூட்ட, சுக்கு, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை பொடி செய்து சேர்த்துப் பார்க்கலாம்.

டிப்ஸ் 4: அடுத்த பண்டிகை சீசனுக்காக, இனிப்புகள் செய்யும்போது, முன்கூட்டியே ஒரு கம்பி பதத்தில் சர்க்கரை அல்லது வெல்லப்பாகு தயாரித்து ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்தால், உடனடியாக இனிப்பு செய்ய சுலபமாக இருக்கும். இதேபோல், சர்க்கரையை கேரமல் செய்து வைத்துக்கொண்டால், பாயசம் அல்லது புட்டிங் போன்ற இனிப்புகளுக்கு அழகான நிறத்தையும், தனித்துவமான சுவையையும் கொடுக்கும்.

Kitchen Hacks In Tamil Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: