நீங்கள் சமைப்பதற்கு முன், காய்கறியின் தோலை நீக்கி சுத்தம் செய்திருக்கலாம். ஆனால், சில காய்கறியின் தோல்கள் உண்ணக்கூடியவை மட்டுமல்ல, சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கிறது. நீங்கள் தோலுரிப்பதை தவிர்க்க வேண்டிய ஆறு காய்கறிகள் இங்கே
1. உருளைக்கிழங்கு
நீங்கள் மென்மையான, கிரீமியான உருளைக்கிழங்கை பெற, அதன் தோலை உரிக்க விரும்பினாலும், அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோல்களில் ஒரே மாதிரியான நார்ச்சத்து, இரும்பு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே நீங்கள் சமைக்கும் முன் அதை நன்கு கழுவி, சுத்தம் செய்தாலே போதுமானது.
2. கேரட்
கேரட்டில் காணப்படும் பெரும்பாலான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி3 உண்மையில் தோலிலும் தோலுக்குக் கீழே உள்ள அடுக்கிலும் நிறைந்துள்ளது. எனவே தோலை அப்படியே விட்டுவிடுவது இந்த ஆரோக்கியமான வைட்டமின்களின் அதிகபட்ச அளவைப் பெறுவதை உறுதி செய்கிறது. ஒருவேளை நீங்கள் அவற்றை ரோஸ்ட் செய்ய திட்டமிட்டால், பீலர் கொண்டு தோல் உரிக்கலாம். ஏனெனில்’ அடுப்பில் சமைக்கும் போது தோல் சிறிது கசப்பு சுவையாக மாறும்.
3. கத்தரிக்காய்
கத்தரிக்காயை சமைக்கும் போது தோல் மென்மையாக மாறிவிடும். எனவே, அதை உரிக்க எந்த தேவையும் இல்லை. மேலும், இதில் உள்ள நீர் உள்ளடக்கம் காரணமாக, நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் தோலில் உள்ளன. எனவே கத்தரிக்காயை கழுவி அப்படியே சமைக்க பயன்படுத்தலாம்.
4. வெள்ளரி
வெள்ளரிகள் நம்பமுடியாத அளவிற்கு அதிக நீர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன, சருமத்திற்கு தேவையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் வெள்ளரியில் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் வைட்டமின் ஏ உங்கள் கண்கள் மற்றும் தோலுக்கு நன்மை பயக்கும். ஆனால், சில வகையான வெள்ளரிகள் கடினமான, மெழுகு போன்ற வெளிப்புற தோலை கொண்டுள்ளன, எனவே நீங்கள் உரிப்பதை தவிர்க்க திட்டமிட்டால், சாப்பிடுவதற்கு முன் அவற்றை நன்கு கழுவ வேண்டும்.
5. கிவி
நீங்கள் பீச் பழத்தின் தோலை உண்கிறீர்கள், ஆனால் கிவியின் தோலையும் உண்ணலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிவி தோலை சாப்பிடுவதால், சிறிய பழத்தில் இருந்து கிடைக்கும் நார்ச்சத்து மூன்று மடங்கு அதிகரிக்கும். இது சதையைப் போலவே சுவையாக இருக்காது என்றாலும் கொஞ்சம் இனிப்பு மற்றும் அதிக புளிப்பு சுவையில் இருக்கும்.
6. சுரைக்காய்
சீமை சுரைக்காய் மற்றும் அதன் மஞ்சள் நிற தோல், உங்களுக்கு நல்லது. அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இதில் உள்ளன. முக்கியமாக தோலில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. சீமை சுரைக்காய் சமைப்பதற்கு முன் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்தால் போதுமானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.